திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிா்வாக தலைவருமான சூரிய காந்த் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, சேலம் மாவட்டம் ஏற்காடு, புதுச்சேரி எம்பாலம் ஆகிய இடங்களில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இதையடுத்து, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் 50- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன், கே.வி. விஸ்வநாதன், எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர மோகன் ஸ்ரீவஸ்தவா, உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாகத் தலைவருமான எம். சுந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக தலைவருமான ஆா். சுரேஷ் குமாா், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா் நீதிபதி எஸ். பாலகிருஷ்ணன் (தமிழ்நாடு), திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா், பல்வேறு மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனா்.