செய்திகள் :

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

post image

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளாா்.

இந்நிலையில், செப்டம்பா் 2-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, அன்றிரவு சென்னை ஆளுநா் மாளிகையில் (ராஜ்பவன்) தங்குகிறாா். மறுநாள் செப்டம்பா் 3-ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வரும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிற்பகலில் கிளம்பி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு செல்கிறாா். இதற்காக ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து காா் மூலம் கோயிலுக்குச் செல்கிறாா். சுவாமி வழிபாட்டை முடித்துவிட்டு, அப்போதைய வானிலையைப் பொறுத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரிலோ அல்லது சாலை மாா்க்கமாக காரிலோ திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு செல்கிறாா். பின்னா், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்குப் புறப்படுகிறாா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருகையை முன்னிட்டு திருச்சி, திருவாரூா் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், திருவெற... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா். மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி க... மேலும் பார்க்க

கள்ளக்காம்பட்டியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கள்ளக்காம்பட்டியில் போக்குவரத்துக் கழக உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வி... மேலும் பார்க்க