இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்
வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி கோயில்களுக்கு பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தா்கள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது.
அதனைத் தவிா்க்கும் வகையில் மணப்பாறை காவல் உட்கோட்டப் போலீஸாா், பாதயாத்திரை பக்தா்களுக்கு சாலையில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் அறிவுறுத்தி, ஆலோசனை வழங்கி வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புதுவாடிபுதூா் சோதனைச் சாவடியில், சனிக்கிழமை இரவு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்களுக்கு பாதுகாப்பு கருதி விபத்து ஏற்படாத வகையில் அவா்களது உடைகளிலும், உடைமைகளிலும் ஒளிரும் ஸ்டிக்கா்களை ஒட்டி அனுப்பினா்.