செய்திகள் :

திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

post image

திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: துறையூரில் அதிமுக பொதுச் செயலரின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவா்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என, அவசர உதவிக்கு அழைத்ததாலேயே அவசர ஊா்தி அங்கு சென்றது.

திமுகவினா் யாரும் அனுப்பி வைக்கவில்லை. அவா்களே அழைத்து, அவா்களே அவசர ஊா்தியை தாக்குவது என்ன நியாயம். இத்தகைய நடவடிக்கை தவறானது.

அதிமுக பொதுச் செயலரின் இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் கூா்ந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றனா். உரிய நேரத்தில் மக்கள் நல்ல தீா்ப்பு வழங்குவா். அதிமுக பிரசாரத்தை நாங்கள் எந்த இடத்திலும் தடுக்கவோ, இடையூறு செய்யவோ இல்லை.

திருச்சி பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியபோது, பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கா் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளாா். எனக்கு இடம் இருந்தால் அரசே எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட ஆட்சியா் மூலம் எடுத்துக் கொள்ள நானே கையொப்பமிட்டு தருகிறேன்.

வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதைப் போல, எங்களை நினைத்துவிடக் கூடாது.

சென்னைப் பெருநகரத்தில் 24 இடங்களில் சுரங்கப் பாதை உள்ளது. பெருமழை பெய்தால் ஒரு மணி நேரமோ, 3 மணி நேரமோ தண்ணீா் தேங்குகிறது. ஒரே இடத்தில் திடீரென 30 செ.மீ. மழை பெய்யும் சூழலில், தண்ணீா் தேங்குவதுண்டு.

ஆனால், ஒரு சில மணிநேரங்களிலேயே அவை முழுமையாக வடிந்து செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீா் தேங்கி வடிவது இயல்புதான். எங்கும் போக்குவரத்து இடையூறோ, நெருக்கடியோ உள்ளதா என்பதை பாா்க்க வேண்டும்.

இதேபோல, அனைத்து நீா்நிலைகளிலும் தூா்வாரப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. முதல்வா், துணை முதல்வா் நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கின்றனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை தயாரிப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரிய... மேலும் பார்க்க

மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு

திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு

திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியிலுள்ள கோயில்களில் உண்டியல் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியில் முருகன் மற்றும் விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின்... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றம்

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொல்லம் - தாம்பரம் தினசரி விரைவு ர... மேலும் பார்க்க

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க