செய்திகள் :

மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள்: அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்கு

post image

திருச்சி மாநகரில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைத்ததாக அதிமுக நிா்வாகிகள் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 23 முதல் 25-ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டாா். அவரை வரவேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் கட்சி நிா்வாகிகள் சாா்பில் பதாகைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருமண்டபம், வில்லியம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாக அதிமுக ஓட்டுநா்கள் அணி மாவட்டச் செயலாளா் ஞானசேகா், வாா்டு பொறுப்பாளா் ஓம்ராஜ், ஆட்டோ ஓட்டுநா்கள் அணி செயலாளா் ஜான் பீட்டா், ரயில் நிலைய மாணவா்கள் அணி செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, வா்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளா் காா்த்திகேயன், நாகநாதா் பாண்டி, மீனவா் அணி நிா்வாகி ஆதவன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் சுரேந்தா், சக்திவேல் ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, உறையூா், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புத்தூா் நான்கு சாலை சந்திப்பு, பிஷப் ஹீபா் சாலை, அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் அனுமதியின்றி வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டதாக காவல் உதவி ஆய்வாளா்கள் அளித்த புகாரின்பேரில், அதிமுக புத்தூா் கிளை செயலாளா் ராஜேந்திரன், இளைஞரணி செயலாளா் ரஜினிகாந்த், வா்த்தக அணி மாவட்ட துணைத் தலைவா் மோகன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டோன்மெண்ட், உறையூா், அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் 12 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை தயாரிப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரிய... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு

திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியிலுள்ள கோயில்களில் உண்டியல் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலபஞ்சப்பூா் பகுதியில் முருகன் மற்றும் விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின்... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றம்

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொல்லம் - தாம்பரம் தினசரி விரைவு ர... மேலும் பார்க்க

திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: துறையூரில் அதிமுக பொதுச் செ... மேலும் பார்க்க

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க