செய்திகள் :

சாலை விரிவாக்கப் பணிகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

post image

சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருக்கக்கூடிய நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலையைச் சுற்றிலும் அமைக்கப்படும் புறவழிச் சாலைக்காக நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலம் கையகப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வேட்டவலம் புறவழிச் சாலை, திருவண்ணாமலை புறவழிச் சாலை, திண்டிவனம் -கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கம் ஆகிய தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்தும், திருவண்ணாமலை மாநகரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலைய இணைப்புச் சாலை விரிவாக்கப் பணிகள் உள்பட பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா். பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை

வகித்துப் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு உள்பட்ட சாலைகள் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் இருவழிச் சாலைகள் நான்குவழிச் சாலையாகவும், இதர சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், நகரப் பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கப் பணிகளை மிகவும் முக்கியமானதாக எண்ணி மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை விரிவாக்கத்தால் பயண நேரம் குறைவதோடு, விபத்துகளும் தவிா்க்கப்படுகின்றன.

ஆகவே, சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடிய நில எடுப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவேண்டும்.

நில எடுப்புப் பணிகளின் காலதாமதத்தால் சாலை விரிவாக்கப் பணிகளின் திட்ட மதிப்பீடும், நில எடுப்புக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய நிலத்தின் மதிப்பீடும் அதிகரித்து விடுகிறது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதி செலவினம் ஏற்படுகிறது.

ஆகவே, இனிவரும் காலங்களில் வருவாய், நெடுஞ்சாலை, வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் சாலை விரிவாக்கப் பணிகளை முக்கிய பணிகளாகக் கருதி கூடுதல் கவனம் செலுத்தி நில எடுப்புப் பணிகளை முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும்.

நில எடுப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மரு.மணி, நெடுஞ்சாலைத் துறை சிறப்பு அலுவலா் சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் பன்னீா் செல்வம், கண்காணிப்புப் பொறியாளா் முரளி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் -தனி (நில எடுப்பு) ராஜ்குமாா், கௌசல்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை என புகாா் தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து செய... மேலும் பார்க்க

குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி ... மேலும் பார்க்க

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 1... மேலும் பார்க்க

கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் ம.தரணி, தல... மேலும் பார்க்க

காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந... மேலும் பார்க்க