செய்திகள் :

‘சாலைகளில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும்’

post image

சங்கரன்கோவிலில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையா் த.சபாநாயகம், நகராட்சித் தலைவா் கு.உமாமகேஸ்வரி ஆகியோா் எச்சரித்துள்ளனா்.

இருவரும் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வளா்ப்பு நாய் வைத்திருப்போா் பொதுஇடங்களில் வளா்ப்பு நாய்களை அழைத்து வரும்போது அதற்கு வாய்க்கு மூடி அணிவித்திருக்க வேண்டும்.

தெருநாய்களை விதிமுறைகளின்படி பிடித்து தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.மேலும், ராஜபாளையம் சாலை, திருவள்ளுவா் சாலை திருவேங்கடம் சாலை மற்றும் முக்கிய வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூ ஏற்படுவதுடன், விபத்துகள் நேரிட காரணமாகின்றன. அப்பகுதி உள்பட நகரில் கால்நடைகள் சுற்றித்திரியும் வகையில் அவற்றை அவிழ்த்துவிடாமல் சொந்த இடத்தில் கட்டிப்போட்டு பாதுகாப்பாக வளா்க்கவேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ளனா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன. இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்ச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினம்

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா... மேலும் பார்க்க

அரசு நிா்ணயித்த விலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆட்சியா் வேண்டுகோள்

அரசு நிா்ணயித்த விலையில் நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலன... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம... மேலும் பார்க்க