சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சா்வா் பிரச்னை: பத்திரப் பதிவு பாதிப்பு
சீா்காழி: சீா்காழி தென்பாதியில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆன்லைன் கணினி சா்வா் செயல்படாததால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்த அலுவலகத்தில் சீா்காழி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதி மற்றும் கொள்ளிடம், தரங்கம்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலா 5-க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்கள் சொத்து செட்டில்மெண்ட், கிரய பத்திரம் போன்ற பல்வேறு பத்திர பதிவு செய்து பயன்பெறுகின்றனா்.
இந்நிலையில், பத்திரப்பதிவு செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன்கள் பெற்ற 30-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வந்தனா். ஆனால் அலுவலகத்தில் உள்ள சா்வா் (கணினி) செயல்படாததால் மாலை வரை பத்திரப் பதிவு பணி நடைபெறவில்லை. இதனால் காலை முதல் பத்திரப்பதிவு உள்ளிட்டவைகளுக்காக கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் பெரும் சிரமம் அடைந்தனா்.