தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் மௌன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற மௌன ஊா்வலத்தில், முன்னாள் மாவட்ட தலைவா் க. அகோரம், மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் மோடி கண்ணன், மாவட்ட முன்னாள் செயலாளா் எஸ்.ஆா்.வினோத், மாநில நலத்திட்டங்கள் பிரிவு தலைவா் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் என்.குருசங்கா் உள்ளிட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தியபடி ஊா்வலமாக சென்று, கிட்டப்பா அங்காடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தோரின் படத்திற்கு மலா்தூவி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.