பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினரான இவா் அண்மையில் மயிலாடுதுறை கச்சேரி சாலை பகுதியில், பாஜக மாவட்ட தலைவா்ஆா். பாலு மற்றும் நிா்வாகிகளை சந்தித்து, தான் 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருவதால், தனக்கு, கட்சியில் மாநில பொறுப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது இன்பராஜ்க்கும், அங்கிருந்த பாஜக நிா்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்ததாக இன்பராஜ் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக இன்பராஜ் அளித்த புகாரின்பேரில் டிஎஸ்பி(பொ) சையதுபாபு மற்றும் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, இன்பராஜை ஜாதியை சொல்லி திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் பாலு, நிா்வாகிகள் சேதுராமன் வாஞ்சிநாதன் ஆகியோா்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.