செய்திகள் :

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

2025-2026-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சம். இத்திட்டத்தின்கீழ் மாணவா்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 30. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க கடைசி நாள்: அக்.15. இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ-மாணவிகள் ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவுசெய்து 2025-2026-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்தல் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஞபத சன்ம்க்ஷங்ழ் & டஹள்ள்ஜ்ா்ழ்க் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும்.

இந்த ஞபத எண்ணை பயன்படுத்தி 2025-2026-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடா்புடைய முதன்மை கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளுமாறும், இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட மேற்கூறிய இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைம... மேலும் பார்க்க

நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நரிக்குறவ மாணவிகளுக்கு திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்க செயற்குழுக் கூட்டம்

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பால்.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிர... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்ய... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தாா். கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தின்போது, குழந்தைகள், பெண்... மேலும் பார்க்க