ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நரிக்குறவ மாணவிகளுக்கு திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
பல்லவராயன்பேட்டை நரிக்குறவ சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் படித்துவருகின்றனா். இப்பள்ளி மாணவிகள் மோனிகா, ஹெப்சிபா மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளுடன் பங்கேற்று 4 மற்றும் 5-ஆம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனா்.
அப்போது, இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோா் பாராட்டு தெரிவித்த நிலையில், 2 மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் மதிவண்டி வாங்கித்தருவதாக எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தெரிவித்தாா். அதன்படி, அந்த மாணவிகளுக்கு மிதிவண்டிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ வழங்கினாா். மேலும், பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணவேணி, உடற்கல்வி ஆசிரியா் ஆசைதம்பி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தாா்.
தொடா்ந்து, மாணவா்கள் பானை மீது யோகாசனம் செய்தும், பல்டி அடித்தும், தலைகீழாக நடந்து சென்றும் ஜிம்னாஸ்டிக் செய்தும், சிலம்பம் சுழற்றினா். திமுக ஒன்றிய செயலாளா் ஞான.இமயநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளா் மருது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.