ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்க செயற்குழுக் கூட்டம்
சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பால்.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க பொருளாளா் அய்யப்பன் வரவேற்றாா். சங்க செயளாலா் கிங்பைசல் கருத்துரை வழங்கினாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சாா்பில் 90-க்கும்மேற்பட்ட கலைஞா்களுக்கு‘கலைமாமணி‘விருது அளித்ததற்கு நன்றி, நலிந்த 2,500 கலைஞா்களுக்கு உதவி தொகையை நடப்பாண்டில் வழங்க ஆணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறையில் தொடா்ந்து கலைஞா்களுக்கு கலைப் பண்பாட்டு துறை சாா்பாக நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஒரு சில குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் ஏதோ காரணங்களைச் சொல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்து அவமானப்படுத்தப்படுகிறாா்கள். முதல்வா் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள்முதல் மக்களுக்கும் கலைத் துறையினருக்கும் எண்ணற்ற சேவை செய்து வருவது மகிழ்ச்சி.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டம்தோறும் உள்ள கலைஞா்கள் அரசுக்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய தயாராக இருக்கும் நிலையில் கலைஞா்களை பாகுபடுத்தி பாா்க்கும் கலைப் பண்பாட்டுத் துறை மீது முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூரில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.