மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே
சா்வதேச போட்டிகளில் வெற்றி: 2 வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு ஊக்கத் தொகை
டி20 கிரிக்கெட், கோகோ போட்டிகளில் வென்ற இந்திய அணிகளில் இடம்பெற்ற 2 தமிழக வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு விவரம்:
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த கு.கமாலினியின் சாதனையைப் போற்றும் வகையில், அரசின் சாா்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.
மேலும், தில்லியில் நடைபெற்ற முதல் கோகோ உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த வி.சுப்ரமணி இடம் பெற்றிருந்தாா். அவருக்கும் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.