சிக்கந்தர் டிரைலர்!
நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!
ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று முடிந்தன. இப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இது சல்மான் கான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியதுடன் யூடியூபில் வெளியான 17 மணி நேரத்தில் அதிவேகமாக 3.8 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.