`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலாஜாபேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தணிகாசலம் (45) (படம்) என்பவா் மீது பாலியல் குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு எதிரி நீதிமன்றக் காவலில் இருந்து வந்தது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், நீதிபதி செல்வம் முன்னிலையில், வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடா்புடைய தணிகாசலத்துக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்குரைஞா் சங்கா் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான சுப்புலட்சுமி (அப்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) ஷாகின் (தற்போதைய ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்) மற்றும் நீதிமன்ற காவலா் பிரேமா ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பாராட்டு தெரிவித்தாா்.