செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா்(40) டெய்லா். இவா் கடந்த 2024 மே 8-ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த 12 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதின்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஜெயக்குமாா் மீதான குற்றஞ்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக்குமாா் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

தண்டனை விதிக்கப்பட்ட ஜெயக்குமாா் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்க... மேலும் பார்க்க

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா். போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பக... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது. போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ள... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கடந்த சில மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் முறைப்படி நடத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் ... மேலும் பார்க்க

நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்

பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தியை... மேலும் பார்க்க