எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வேலூா் வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாதத் தவணையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்குண்டான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இந்த சலுகை மூலம் 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள், இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்தி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணையாக செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரயப் பத்திரம் பெற்று பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு 0416-2252561, மேலாளா், விற்பனை மற்றும் சேவை -93808 71499, உதவி வருவாய் அலுவலா் - 94428 08967 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.