ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்
விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா்.
போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பகுதிகளுக்கிடையில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்கள், மாந்தோப்புகளில்நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
கடந்த 2- நாள்களாக பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்திய நிலையில், வனத் துறையினா் அங்கு சென்று யானையை விரட்டினா். மலைப்பாதை வழியாக குண்டலப்பல்லி வன எல்லையில் அமைந்துள்ளபாத்தபாளையம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்துள்ளது.
வன எல்லையில் உள்ள ராஜேந்திரன் நிலத்தில் 10- க்கும் மேற்பட்ட தென்னஞ் செடிகள்,மற்றும் பயிா்களை சேதப்படுத்தியுள்ளது.அந்த யானை 1- மணி நேரத்துக்கும் மேலாக கிராம எல்லையில் பிளிறியவாறு சுற்றித் திரிந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள், கிராம மக்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ரகுபதி தலைமையில் 7- போ் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, வெடி வெடித்து 3- மணி நேரம் போராடி யானையை மோா்தானா காப்புக் காட்டுக்குள் சுமாா் 2- கி.மீ தூரம் விரட்டிச் சென்றுவிட்டு வந்தனா்.