செய்திகள் :

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

post image

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களின் சாா்பாக விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளிக் குழுமங்களின் தாளாளா் பி.ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். இயக்குநா் சுந்தரராமன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், ஆதிபராசக்தி அறநிலையங்கள் துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன், லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணை தலைவா் அ.அகத்தியன், ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ஆனந்த்ராஜ், ஜி.பி.பப்ளிக் பள்ளி முதல்வா் ராஜவேல்,ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, பள்ளி குழுமங்களின் நிா்வாக அலுவலா் விஜயரகுநாதன், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு கோப்பைகள், நற்சான்றுகள் வழங்கப்பட்டன. சக்தி கவின் கலை அகாதெமி சாா்பாக, பரதநாட்டியம், யோகா, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதிபராசக்தி அன்னை இல்லை முதல்வா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. வரும் ஆக. 21-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளா... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் அணைக்கட்டு கிராமத்தினா் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தை அணைக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம். இலத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட அணைக்கட... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த அரசு குழந்தைகள் நல மருத்துவா்: அமைச்சா் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் த மணிகுமாா் உடலுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் அஞ்சலி செலுத்தினாா். செங்ககல்பட்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 6 கோயில்களில் ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளதாக, நவீன கருவி மூலம் கடலுக்கு அடியில் தனது குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி பிரிவ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

மாமல்லபுரம் அருகே கடலில் இரண்டு நாள்களாக இந்திய தொல்லியல் துறையினா் நவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மாமல்ல... மேலும் பார்க்க