எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
செங்கல்பட்டில் மக்கள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய்அலுவலா் மா.கணேஷ்குமாா், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.