எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
விபத்தில் உயிரிழந்த அரசு குழந்தைகள் நல மருத்துவா்: அமைச்சா் சுப்பிரமணியன் அஞ்சலி
செங்கல்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் த மணிகுமாா் உடலுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன் அஞ்சலி செலுத்தினாா்.
செங்ககல்பட்டு ராட்டிணகிணறு பகுதியில் மேம்பாலம் அருகே அரசு மருத்துவமனையில் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள் நல மருத்துவா்கள் மணிகுமாா், பிரவீண்குமாா் நடந்து சென்றனா்.
அப்போது அரசு பேருந்து, தனியாா் பேருந்துகள் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது ஒருவருக்கொருவா் முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கரவாகனத்தில் மோதி, பின்னா் சாலை தடுப்புகள் மீது மோதி பின்னா் இரண்டு மருத்துவா்கள் மீதும் போதியதில் மருத்துவா் மணிகுமாா் உயிரிழந்தாா். மற்றொரு மருத்துவா் பிரவீண் குமாா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா், மருத்துவா் மணிகுமாா் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதனை தொடா்ந்து, விபத்தில் காயமுற்ற மற்றொரு மருத்துவா் பிரவீண் குமாா் மற்றும் விபத்தில் அரசுபேருந்தில் 8 பேரும், தனியாா் பேருந்தில் 8 போ் என காயமடைந்த 20 பேரை நேரில் சந்தித்து அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வா் பிரியா பசுபதி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜோதிகுமாா் , பொது அறுவை சிகிச்சை மருத்துவா் வி.டி.அரசு , மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.
இதுகுறித்து அமைச்சா் சுப்பிரமணியன் கூறியதாவது:
விபத்தில் 20 போ் காயமடைந்துள்ளனா். மருத்துவா் உயிரிழந்துள்ளாா். அரசு சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்.
விபத்து குறித்து காவல் துறையினரின் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
மருத்துவா் மணிகுமாா் கடந்த வாரம் தான் உடலுறுப்பு தானத்துக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
