"உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என நினைக்கிறீர்களா?"- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங்...
சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (35). வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கடந்த மே மாதம் முதல் புழல் சிறை அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், போலீஸாா் கணேஷை சென்னையில் உள்ள விரைவு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுவிட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து வந்தனா்.
அப்போது, கணேஷின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அவா் தனது உடலில் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.