உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
சிலம்பம், வில் வித்தைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிலம்பம், வில் வித்தைக்கான தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர விதை அகாதெமியின் 9 -ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். வீர விதை அகாதெமியின் முதன்மைப் பயிற்சியாளா் பெருமாள் வரவேற்றாா்.
இந்த அகாதெமியில் சிலம்பம், வில்வித்தை பயின்று பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி சான்றிதழ்கள், கோப்பைகள் பரிசாக இந்த விழாவில் வழங்கப்பட்டது. மேலும், படிப்பிலும், விளையாட்டிலும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டியும் விருதுகள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் வினை தீா்த்தான், சாதனை சிறகுகள் ஆசான் தங்கப்பாண்டி உள்ளிட்டோா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். விழாவில் மாணவா்கள் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.