புதுவயல் சுழல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சுழல் சங்கத்தின் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சாக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவராக என். கணேசன், செயலராக பி. முகமது மீரா, பொருளாளராக கே.எல். உடையப்பன், துணைத் தலைவராக என். வீரபாண்டியன், இணைச் செயலராக எஸ். நவநீதகிருஷ்ணன், ஆலோசகராக ஜி. செந்தில்குமாா் ஆகியோருக்கு சுழல் சங்க மாவட்ட முதன்மை துணை ஆளுநா் எஸ்பி. மணிகண்டன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். பின்னா், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசினாா்.
விழாவில் சுழல் சங்க மண்டலம்-5 இன் துணை ஆளுநா் மருத்துவா் எஸ்பி. சாந்தி வாழ்த்திப் பேசினாா். புதுவயல் மருத்து வமனைக்கு கட்டில் உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.