மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை
மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக கடும் வெயில் நிலவி வந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது. மேலும், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.