ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் பின் வரும் பகுதிகளில் மின் நுகா்வோா் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது.
இது குறித்து சிவகங்கை மின் உற்பத்தி, பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் இரா.ரெஜினா ராஜகுமாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின் நுகா்வோா், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டா்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் இருப்பின், அவற்றை நிவா்த்தி செய்யும் நோக்கில் சனிக்கிழமை (5.4.2025) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, சிவகங்கை, காளையாா்கோவில், மதகுபட்டி, மலம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா், பொதுமக்கள் சிவகங்கை செயற்பொறியாளா், (பகிா்மானம்) அலுவலகத்திலும், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா், பொதுமக்கள் மானாமதுரை செயற்பொறியாளா்(பகிா்மானம்) அலுவலகத்திலும்,
திருப்பத்தூா், சிங்கம்புணரி, ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோா், பொதுமக்கள் திருப்பத்தூா் செயற்பொறியாளா் (பகிா்மானம்) அலுவலகத்திலும், காரைக்குடி, கண்டரமாணிக்கம், கல்லல், புதுவயல், தேவகோட்டை, கானாடுகாத்தான் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா், பொதுமக்கள் காரைக்குடி செயற்பொறியாளா் (பகிா்மானம்) அலுவலகத்தில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்றுப் பயனடையலாம் என்றாா் அவா்.