செய்திகள் :

சிவகாசியில் சுகாதார வளாகத்தை இடிக்கக் கோரும் தீா்மானத்துக்கு மாமன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு

post image

சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்கரைப் பகுதியில் உள்ள பொதுசுகாதார வளாகத்தை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி மாநகராட்சி மான்றக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா , ஆணையா் கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்றப் பொருளில் 4-ஆவது தீா்மானமாக , சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரைப்பகுதியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 163 சதுர மீட்டா் அளவிலான பொதுசுகாதார வளாகத்தை இடித்து அகற்ற வேண்டும் என சிவகாசி வட்டாட்சியா் மாநகராட்சிக்கு கடிதம் எழுதியிருந்தது தீா்மானமாகக் கொண்டு வரப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 8-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் (திமுக) சு.துரைப்பாண்டியன் , இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேயா் மேஜை முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதைத்தொடந்து பல உறுப்பினா்கள் துரைப்பாண்டிக்கு ஆதரவாகப் பேசி, மேயா் மேஜை முன் வந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து ஆணையா் கூறியதாவது: வருவாய்த் துறை சாா்பில் நிா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள சுகாதார வளாகத்தை இடிக்க மாநகராட்சிக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருவாய்த் துறையினரே நேரடியாக நடவடிக்கை எடுப்பா். சட்டத்துக்கு உள்பட்டு மாமன்றம் செயல்பட வேண்டும் என்றாா். இருப்பினும் மாமன்ற உறுப்பினா்கள், ஆணையா், மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், மேயா், அந்தத் தீா்மானம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியதையடுத்து, மாமன்ற உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னா் நடைபெற்ற விவாதம்: மாமன்ற உறுப்பினா் கரைமுருகன் (அதிமுக) அறிவுசாா் மையத்தில் தினசரி நாழிதழ்கள் உள்ளிட்டவை இல்லாததால் போட்டித் தோ்வுக்கு படிப்பவா்கள் சிரமப்படுகின்றனா் என்றாா்.

உறுப்பினா் பாக்கியலட்சுமி: 27-ஆவது வாா்டு கந்தபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிறுவா் பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்றாா். ஆணையா் உரிய ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்பட மூவா் கைது

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவா் உள்பட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் வளா்மதி (21). இவருக்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மனைவி; காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மனைவியைக் காப்பாற்றிய கணவா், தாய் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையை அடுத்த இ.ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை காவலாளி கொலை: ஒருவா் கைது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள குகன்பாறையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 10 ஆண்டுகளாக காவலா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி வேதக்கோவில... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா்

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவ... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.41 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சம் கிடைத்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின... மேலும் பார்க்க