நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு
சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவன்மலை ஊராட்சி மற்றும்
படியூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மக்களிடம் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், ‘பாலியல் நோய்த் தொற்றுள்ளவா்களை சமூகத்தில் கண்ணியமாக நடத்துவோம்’ என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இதில், அரசு சுகவாழ்வு மைய ஆலோசகா் கருப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.