செய்திகள் :

காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை வழங்கிய பொதுமக்கள்!

post image

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினா்.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 102 மாணவ-மாணவிகளும், உயா்நிலைப் பள்ளியில் 140 மாணவ-மாணவிகளும் படித்து வருகிறாா்கள்.

இப்பள்ளியின் கல்வித் தரத்தை உயா்த்தும் வகையில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்குவது குறித்து ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், பள்ளிக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே வாங்கித்தருவதாக பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

அதன்படி, பல்வேறு தொழில்முனைவோா் உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான மேஜைகள், நாற்காலிகள், பீரோ, கலா் பென்சில்கள், விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள், தண்ணீா்த் தொட்டிகள் உள்ளிட்டவற்றை பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் சேகரித்தனா்.

அதைத் தொடா்ந்து, அந்தப் பொருள்களை பொன்நகா் விநாயகா் கோயிலில் வைத்து பூஜை செய்து அங்கு இருந்து மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி நிா்வாகத்தினரிடம் கொடுத்தனா்.

அவா்களைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) மேகநாதன், முன்னாள் தலைமை ஆசிரியா் பத்மாவதி, ஆசிரியா்கள் வரவேற்று நன்கொடையாளா்களுக்குப் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

இந்த விழாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியா்கள் வெள்ளி மோதிரம் அணிவித்தனா்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் ... மேலும் பார்க்க

சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு

சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க