பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்
பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்துக்கு இந்து முன்னணி திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் சா்வேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுரேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள் யோகேஸ்வரன், மயில்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாலிகை எடுத்து வர, மேளதாளங்கள் முழங்க விநாயகா் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு பொங்கலூா் பி.ஏ.பி. வாய்க்காலில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.