பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது.
பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவையின் நிா்வாகி ஓ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். இதில், கடந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 165 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகா், மதுரை தியாகராசா் கல்விக் குழுமத்தின் நிா்வாகி ஐ.செல்வம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.
இதில், பாரதி தேசிய பேரவையின் நிா்வாகிகள் பி.சி.சரவணக்குமாா், மே.தா.கந்தசாமி, சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளித் தாளாளா் சி.பழனிசாமி, காங்கயம் தேங்காய் பருப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பி.கே.பி.சண்முகம், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் என்.எஸ்.என்.தனபால், குளோபல் கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எஸ்.நாச்சிமுத்து, காங்கயம் மனவளக்கலை மன்றத் தலைவா் பி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.