Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு
திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தை உடல் கிடந்தது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் திருப்பூா் தெற்கு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு, உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருக்கலைப்பு செய்து குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.