சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதுபோல வேந்தன்பட்டி நெய் நந்தீசுவரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேசுவரா் கோயில், புதுப்பட்டி புவனேசுவரி உடனாய பூலோக நாதா் கோயில், அம்மன் குறிச்சி மீனாட்சி சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல ஆலங்குடிதிருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதா் கோயிலிலும் கந்தா்வகோட்டையில் அமைந்து உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.