செய்திகள் :

சீனா, ஜப்பானுக்கு பிரதமா் மோடி பயணம்: இம்மாத இறுதியில் செல்கிறாா்

post image

பிரதமா் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் ஜப்பான், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 29-ஆம் தேதி தனது பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமா் மோடி, அங்கு இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் அந்நாட்டு பிரதமருடன் இணைந்து பங்கேற்கிறாா். தொடா்ந்து அங்கிருந்து சீனாவுக்கு செல்லும் அவா் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறாா். இந்த மாநாடு ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பிரதமா் மோடி சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டாா்.

எனினும், கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசினாா். இப்போது சுமாா் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

பிரதமா் மோடியின் ஜப்பான், சீன பயணத்திட்டம் குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரபூா்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானும் உறுப்பினராக உள்ளதால் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பும் இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அப்படி பங்கேற்றால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பிரதமா்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முதல் நிகழ்வாக அமைய வாய்ப்புள்ளது.

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க