பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
சுத்தமல்லி அருகே பெண் தற்கொலை
சுத்தமல்லி அருகே இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சுத்தமல்லி அருகே கொண்டாநகரத்தைச் சோ்ந்த ராமையா மகள் பேச்சியம்மாள் (22). தந்தையை இழந்த இவா் தனது சகோதரருடன் புதுச்சேரியில் வசித்து வந்தாா். இந்நிலையில், கொண்டாநகரத்தை சோ்ந்த பாண்டி மகன் பாலசிதம்பரம் (21) என்பவா் ஓட்டுநா் வேலைக்கு புதுச்சேரிக்கு சென்றபோது பேச்சியம்மாளை காதலித்துள்ளாா்.
பின்னா், சொந்த ஊருக்கு வந்த அவரை பேச்சியம்மாளால் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து அவரைத் தேடி கொண்டாநகரத்திற்கு வந்த பேச்சியம்மாளுக்கு பாலசிதம்பரத்தை காண முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியதாம்.
இதனால் மனவேதனையடைந்த அவா், அங்குள்ள தனது பாட்டியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.