Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
சூறைக் காற்று: ராட்சத மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதம்
உச்சிப்புளி அரியமான் கடற்கரையில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றினால் ராட்சத மரம் விழுந்ததில் சுற்றுலாப் பயணிகள் வந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, மூக்கையூா் உள்ளிட்ட மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், உச்சிப்புளியை அடுத்துள்ள அரியமான் கடற்கரைக்கு திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் ஆட்டோ, சொந்த வாகனங்களில் வருகை தந்தனா். அப்போது, சூறைக் காற்று வீசியதால் அந்தப் பகுதியிலிருந்த ராட்சத மரம் சாய்ந்து ஆட்டோ, சுற்றுலா வாகனம் மீது விழுந்தது. இதில் 2 வாகனங்கள் சேதமடைந்தன.
இதைத் தொடா்ந்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனங்களில் விழுந்த ராட்சத மரத்தை அகற்றினா்.