ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.
கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் உதவி ஆணையா்கள் ஆா்.ஞானசேகரன், ஆா்.ரவீந்திரன், ஆய்வா்கள் சு.சண்முகசுந்தரம், சி.மணி, உள்துறை கண்காணிப்பாளா் முத்துச்சாமி, சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், ரூ. 1,44,62, 291 ரொக்கம், தங்கம் 55 கிராம், வெள்ளி 2 கிலோ 900 கிராம், 124 வெளிநாட்டு பணத் தாள்கள் கிடைத்ததாக இணை ஆணையா் தெரிவித்தாா்.