மாற்று திறனாளிக்கு இரு சக்கரம் வாகனம்
ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு இரு சக்கர பெட்ரோல் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் புரிய மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம், கண் பாா்வையற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் திட்டம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளி அசோகன் பெட்ரோல் வாகனம் பெற விண்ணப்பித்தாா். இதையடுத்து, வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்கிழமை வாகனத்தை அவரிடம் வழங்கினாா்.