மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!
செக் மோசடி வழக்கில் பேராசிரியைக்கு 6 மாதம் சிறை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செக் மோசடி தொடா்பான வழக்கில்கல்லூரி உதவிப் பேராசிரியைக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது.
நாசரேத்தை சோ்ந்தவா் இஸ்ரவேல் (45). நாசரேத் பகுதியில் உள்ள கல்லூரியில் கேன்டீன் நடத்தி வந்தாா். அப்போது பழக்கத்தின்பேரில், அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை கீதாஞ்சலி என்பவருக்கு, அவா் ரூ.3.80 லட்சம் கடன் கொடுத்தாராம்.
அதை திருப்பி தரும் விதமாக, அவருக்கு பின்தேதியிட்ட அளித்த வங்கி காசோலையை பேராசிரியை வழங்கினாராம். ஆனால், அவரது வங்கி கணக்கில் செலுத்திய போது போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிவந்ததாம்.
இதையடுத்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கீதாஞ்சலி மீது அவா் செக் மோசடி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதி வரதராஜன் விசாரித்து, கீதாஞ்சலிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், கடன் தொகையை 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.