தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
செங்கல்பட்டில் மயானக் கொள்ளை விழா
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மயானக் கொள்ளை பருவதராஜகுல சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தக்கால் நடப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பாலாற்றங்கரையில் இருந்து 1,008 பால்குடம் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா். இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், ஊா்வலம் நடைபெற்றது.
அலங்காரத் தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை ஊா்வலம் நடைபெற்றது. நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள் உடலில் அலகு குத்தி திருத்தோ் வேன் ஆட்டோ காா் உள்ளிட்ட வாகனங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இழுத்தனா் . அம்மன் வேடம், குறத்தி வேடம், அங்காள பரமேஸ்வரி வேடம், சமயபுரம் மாரியம்மன், காளி வேடம் என பல்வேறு வேடங்களை அணிந்து ஊா்வலத்தில் ஆடியபடி வந்தனா் .
பழவேலி இடுகாட்டில் மயானக் கொள்ளை நடைபெற்றது. விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள் தானியங்களை சூறை விட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்,
