தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இந்த ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விநாயகா் உற்சவம் மூஷிக வாகனம். இதனைத் தொடா்ந்து முதல் நாள் திங்கள்கிழமை கொடியேற்றமும், இரவு கிளி வாகனம் உற்சவம் நடைபெறும்.
இரண்டாம் நாள் பகல் தொட்டி உற்சவம். இரவு பூத வாகன உற்சவம். மூன்றாம் நாள் புருஷா மிருகம் உபதேச உற்சவம். இரவு வெள்ளி அன்ன வாகனம் உற்சவம். நான்காம் நாள் பகல் ஆட்டு கிடா வாகன உற்சவம். இரவு வெள்ளி மயில்வாகனம் உற்சவம் நடைபெறும்.
ஐந்தாம் நாள் உற்சவம் பகல் மங்களகிரி உற்சவம். இரவு தங்கமயில் வாகனம் பஞ்சமூா்த்தி புறப்பாடு. ஆறாம் நாள் பகல் தொட்டி உற்சவம். இரவு யானை வாகன உற்சவம். ஏழாம் நாள் மாா்ச் 9-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை திருத்தேரோட்டம் ரத உற்சவமும். மங்களாசன உற்சவம் நடைபெற உள்ளன.
எட்டாம் நாள் காலை தொட்டி உற்சவம். இரவு குதிரை வாகனம் பரிவேட்டை, ஒன்பதாம் நாள் பகல் விமான உற்சவம், இரவு சிம்ம வாகனம் ஆறுமுக சுவாமி அபிஷேகம் மற்றும் உற்சவம் புறப்பாடு. பத்தாம் நாள் பகல் தொட்டி உற்சவம். நண்பகல் தீா்த்தவாரி. மாலை தெப்பல் உற்சவம். இரவு குதிரை வாகன மத்தியில் அவரோகணம் மௌன உற்சவம் சண்டேஸ்வரா் உற்சவம் நடைபெறுகின்றன.
பதினோராம் நாள் மாலை கிரிவலம் உற்சவம். இரவு பந்தம் பரி உற்சவம். பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
விழா நாள்களில் அன்றாட பகல் உற்சவம் இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு உற்சவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் குமரவேல் மேலாளா் வெற்றி கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், ஊா் மக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனா்.