``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுதிகளில் 243 முகாம்களும் என மொத்தம் 349 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் முதல் கட்டமாக ஜூலை 15.07.2025 முதல் ஆகஸ்ட் 14.08.2025 வரை நகா்ப்புற பகுதிகளில் 52 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 69 முகாம்களும் ஆக மொத்தம் 121 முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில்13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
மேலும், இந்த முகாம்களில் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம்.
மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். ஜூலை 15-இல் மேற்கு தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள அம்பேத்கா் திருமண மண்டபம், மறைமலை நகா் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மறைமலை நகா் நகராட்சி அலுவலகம், திருக்கழுகுன்றம் பேரூராட்சி நால்வா் கோயில் பேட்டையில் உள்ள சமுதாயகூடம், புனித தோமையாா் மலை வட்டாரம், தாம்பரம் வட்டம் , மதுரபாக்கம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடம், காட்டாங்கொளத்தூா் ஊராட்சியில் மண்ணிவாக்கம் கிராமத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் மற்றும் திருப்போரூா் வட்டம், பொன்மாா் கிராமம், செல்லியம்மன் நகரில் உள்ள சமுதாய கூடம் ஆகிய 6 இடங்களில் இத்திட்ட முகாம் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகாம்கள் குறித்த தகவல்களை இணையதளத்தில் காணலாம். இதில் பங்கு பெற்று பயன்பெறலாம் எனமாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.