``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே மூசிவாக்கம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயில் கட்டப்பட்டது. தொடா்ந்து மகா கும்பிஷேகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. புண்யாவாசனம், கணபதி ஹோமம், யாக குண்ட அலங்காரம் செய்தல், ருத்ர பாராயணம், ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்க, வேத விற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு, கோயிலை வலம் வந்தனா். காலை 6.30 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா் மூலவா் பகவானுக்கும், தாயாருக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.