செந்துறையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறையில் வழக்குரைஞா் மணிவண்ணன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சங்கத் தலைவா், காா்ல்மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தில் வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வழக்குரைஞா்கள் பணிகளை மேற்கொள்ளாததால் செந்துறை நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.