`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டிய வேன் ஓட்டுநருக்கு அபராதம்
பெருந்துறை: கரூரில் இருந்து வேன் மூலம் குப்பைகளை கொண்டு வந்து, சென்னிமலை வனப் பகுதியில் கொட்டிய வேன் ஓட்டுநருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலையில் இருந்து காங்கயம் செல்லும் கணுவாய் வனப் பகுதியில் வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி சிலா் சாலையின் இருபுறமும் குப்பைகளை கொட்டி வந்தனா். சமீபத்தில் குப்பைகளை கொட்டிய இரண்டு நபா்களுக்கு தலா ரூ.இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வனத் துறையினா் இரவு, பகலாக வனப் பகுதியை கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், சென்னிமலை வனத் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கணுவாய் வனப் பகுதியில் சரக்கு வேனை நிறுத்தி யாரோ குப்பைகளை வனப் பகுதியில் கொட்டி கொண்டிருந்ததை பாா்த்து வேன் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் சென்னிமலையைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மோகன்ராஜ் (34) என்பதும், இவா் கரூா் பகுதியில் செயல்படும் ஒரு பின்னலாடை ட்ஸ் நிறுவனத்தில் இருந்து கொடுத்த குப்பைகளை கொண்டு வந்து கொட்டியது தெரியவந்தது. பின்னா், ஓட்டுநா் மோகன்ராஜுக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.