இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை
சென்னை: கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இயங்கி வரும் அழகப்பா கல்லூரியில் பயின்று வந்த மாணவர் சபரீஷ்வரன் (18) மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அழகப்பா கல்லூரியில் இளங்கலை 2ஆம் ஆண்டு லெதர் டெக்னாலஜி படித்து வந்த சபரீஷ்வரன், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].