செய்திகள் :

சென்னை: இரண்டு ரௌடிகள் கொலை - யார் இந்த `சுக்கு காபி' சுரேஷ்?

post image

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவரின் நண்பர் சுரேஷ் (எ) படப்பை சுரேஷ். இவர்கள் இருவரும் ரௌடிகள். நேற்று இரவு (16.3.2025) மது அருந்திய இருவரும் கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று அருண், சுரேஷ் ஆகியோரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியது. மதுபோதையில் இருவரும் இருந்ததால் அவர்களால் தப்பி ஓட முடியவில்லை. அதனால் சர்வசாதாரணமாக இருவரையும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் அருண், ராயப்பேட்டை மருத்துவமனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரௌடி சுக்கு காப்பி சுரேஷ்(25) என்பவர் தலைமையிலான டீமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ரௌடி அருண்குமார்

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், `` கடந்த 2022-ம் ஆண்டு ரௌடி அருணின் காதலி சாயின்ஷா என்பவர் கேளம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ரௌடி சுக்கு காபி சுரேஷ், அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். காதலியின் கொலைக்கு ரௌடி சுக்கு காபி சுரேஷை பழிவாங்க அருண் காத்திருந்தார். இந்தத் தகவலை தெரிந்த சுக்கு காபி சுரேஷ், அருண், அவரின் சகோதரர் அர்ஜூனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி நேற்றிரவு அருணும் அவரின் சகோதரர் அர்ஜூன் ஆகியோர் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருப்பதாக சுக்கு காபி சுரேஷிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் கூட்டாளிகளுடன் வந்து அருணைக் கொலை செய்திருக்கிறார். அர்ஜூன் என கருதி படப்பை சுரேஷை இந்தக்கும்பல் தீர்த்துக்கட்டிவிட்டது. இந்த இரட்டை கொலை வழக்கில் ரௌடி சுக்கு காபி சுரேஷ், அவரின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ரௌடி அருண்குமார் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்கு உள்ளன. அதே போல ரௌடி படப்பை சுரேஷ் மீது சென்னை, திருவள்ளூர் காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரௌடி சுக்கு காப்பி சுரேஷ் மீது கொலை உள்பட 17 வழக்கு நிலுவையில் உள்ளன. இரண்டு ரௌடி கும்பல்களுக்கு நடந்த முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கிறது" என்றனர்.

கொலை
கொலை

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் ரௌடி சுக்கு காபி சுரேஷ், கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் ரௌடி அருண்குமார் டீமுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அதனால் அருண்குமாரின் காதலியை சுக்கு காபி சுரேஷ் டீம் கொலை செய்தது. சுக்கு காபி சுரேஷ் மீது சென்னையை தவிர வேலூர், கும்பகோணத்திலும் குற்ற வழக்குகள் உள்ளன. சுக்கு காபி சுரேஷ் கைதானால் மட்டுமே இரட்டை கொலைக்கான முழு விவரம் தெரியவரும்" என்றார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க