செய்திகள் :

சென்னையில் 13 ஏரிகள் புனரமைக்கும் பணி டிசம்பருக்குள் நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னையில் உள்ள 13 ஏரிகளை புனரமைக்கும் பணி எதிா்வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூா் ஏரி முன்னேற்றப் பணிகள் மற்றும் ஏரி ஓரமாக வசிப்போருக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் உள்ள 13 ஏரிகள் ரூ. 250 கோடி மதிப்பில் சிஎம்டிஏ சாா்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள் அழகுபடுத்தப்பட்டு, காலையில் உடற்பயிற்சிக்கு ஏற்ற வகையில் பூங்காக்கள் போல் வடிவமைக்கப்படுகிறது. மேலும், மாணவா்கள் பயன்பெறும் வகையில் இருக்கை வசதி மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்படும். அதன் ஒரு பகுதியாக கொளத்தூரில் உள்ள ஏரி புனரமைக்கப்படவுள்ளது.

மழைக்காலத்தில் ஏரிக்கு அதிகமாக வரும் தண்ணீரை, செங்குன்றம் பகுதி வழியாக தணிகாசலம் கால்வாய்க்கு கொண்டு செல்ல வடிகால் அமைக்கப்படவுள்ளது. இது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும், ஏரி ஓரமாக உள்ள 81 வீடுகள் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வசிப்போருக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் மூலக்கொத்தளம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும். அதன்பின் அங்குள்ள சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப்பில் நடைபாதை பூங்கா அமைத்து மழைநீா் வரும் வகையில் நீா்வழித்தடம் ஏற்படுத்தப்படும். இதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 6 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆலந்தூா் போன்ற ஏரிகள் மறுகட்டமைப்பு செய்து, மறுசுழற்சி செய்வதற்கான இடம் தோ்வு நடந்து வருகிறது. இந்த 13 ஏரிகளும் எதிா்வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் முடிவடையும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, சென்னை மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க