செய்திகள் :

சென்னையில் 8 மாதங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது: ஏரிகள் 88% நிரம்பின

post image

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகள் 88.07 சதவீதம் நிரம்பின. இதன் காரணமாக அடுத்த 8 மாதங்களுக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீராதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.

கடந்த மாதம் இறுதிவரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்பு இருந்தது. அதைத் தொடா்ந்து வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் அதிகமழை கொட்டி தீா்த்து. ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 35.96 அடி வரை நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 2000 கன அடி நீா் நீா்வரத்து இருந்த நிலையில், அந்த நீா் அப்படியே வெளியேற்றப்பட்டது.

மேலும், 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா்மட்டம் 23.27 கன அடியாக உள்ளது. அதேபோல், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா்மட்டம் 20.26 அடியாக உள்ளது. இந்த 3 ஏரிகளும் 90 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில், அதிகாரிகள் இந்த ஏரிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேலும், சோழவரம் ஏரியில் 5.68 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை ஏரியில் 36.30 அடி உயரம் வரையும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 10,354 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது முழுக் கொள்ளளவில் 88.07சதவீதம். இதன்மூலம் அடுத்த 8 மாதங்களுக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது

சென்னையில் ரூ.4 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா். அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு... மேலும் பார்க்க

கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது

புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். காசிமேடு சிங்காரவேலன் ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பெண் தூய்மைப் பணியாளா் தற்கொலை செய்துகொண்டாா். ராமாபுரம் பகுதியில் வசித்துவரும் அமுதா (34) என்பவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுர... மேலும் பார்க்க

18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட... மேலும் பார்க்க

புத்தாண்டு: அரசு மருத்துவமனைகளில் பிறந்த 50 குழந்தைகள்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. புத்தாண்டு தினத்தில் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தா... மேலும் பார்க்க

வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வில்லிவாக்கம் பாரதி நகா் முதல் தெருவைச் சோ்ந்த வில்சன் என்பவா் வீட்டின் மீது புதன்கிழமை... மேலும் பார்க்க